கோதுமை புட்டுPublished: 2017-08-04Prep time: 10 mins Cook time: 15 mins Total time: 25 mins
Summaryகோதுமை புட்டு – Wheat Puttu

- Ingredients
- கோதுமை மாவு – 1 கப் (250 கிராம்)
- சர்க்கரை – ½ கப் (150 கிராம்)
- தேங்காய் – ½ கப் ((½ மூடி)
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- Directions
- கோதுமை புட்டு (Wheat Puttu) செய்முறை:
- கோதுமையை கழுவி அதை குக்கரில் வைத்து ஒரு விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அதில் தண்ணீரை வடித்து விட்டு அதை நன்றாக உலர விட வேண்டும்.
- கோதுமையை மாவு போல மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- இது இரண்டு மூன்று மாதத்திற்கு கூட பயன்படுத்தலாம்.
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும், அதில் தேவையான அளவு சூடான தண்ணீர் தெளித்து விரவவும், மாவை உதிரியாக இருக்கும்மாறு செய்ய வேண்டும்.
- அதை இட்லி தட்டில் 10 நிமிடம் மாவை வேக வைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தேங்காய் துருவல் போட்டு அதில் எண்ணெய், வேக வைத்த புட்டு அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.
- அதை 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும். சுவையான, சத்தான கோதுமைபுட்டு தயார்.
Yield4
Serving size: 1 கப்
Calories per serving: 250
Fat per serving: 12